அறந்தாங்கி நிஷாவை கட்டிப்பிடித்து அழுத அனிதா சம்பத் : வைரல் வீடியோ!

 

அறந்தாங்கி நிஷாவை கட்டிப்பிடித்து அழுத அனிதா சம்பத் : வைரல் வீடியோ!

சென்னை: பிக் பாஸ் 4 -இன் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 4 சீசன் தொடங்கி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. கொரோனா பேரிடர் காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் ரியோ, அறந்தாங்கி நிஷா, ஷனம் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமே அதகளமாக உள்ளது.

அறந்தாங்கி நிஷாவை கட்டிப்பிடித்து அழுத அனிதா சம்பத் : வைரல் வீடியோ!

முதல் வாரத்தில் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் போட்டியாளர்களின் வயது குறைந்த போட்டியாளரான ஷிவானியை சக ஹவுஸ்மேட்ஸ் டார்க்கெட் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் ஷிவானி கடுப்பாக இருப்பது போன்ற நிகழ்வுகளை இதுவரை பார்த்தோம்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில் , ஹார்ட் / ஹார்ட் பிரேக்கிங் கொடுக்கும் டாஸ்க்கில் அனிதா சம்பத் எமோஷனலாக பேசுகிறார். தனது அம்மா கருப்பாக இருப்பார். அதற்காக அவர் வருத்தப்படுவார். என் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு கூட வர மாட்டார்.

அறந்தாங்கி நிஷாவை கட்டிப்பிடித்து அழுத அனிதா சம்பத் : வைரல் வீடியோ!

நிஷா அக்கா தனது நிறத்தை ப்ளஸாக மாற்றி கொண்டு ஸ்டாராக ஜொலிக்கிறார். நிஷா அக்காவிடமிருந்து எங்க அம்மா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுக நிஷா,அனிதாவை கட்டி தழுவி கொள்கிறார். இப்படியாக இந்த ப்ரோமோ முடிகிறது.