‘டேய் சுரேஷ் வெளியே வாடா இப்போ’ ; ஆத்திரத்தில் வெடித்த ஷனம் ஷெட்டி :அனல் பறக்கும் ப்ரோமோ

 

‘டேய்  சுரேஷ் வெளியே வாடா இப்போ’ ; ஆத்திரத்தில் வெடித்த ஷனம் ஷெட்டி :அனல் பறக்கும் ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 4 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று நடந்த நாடா? காடா டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இதில் நேற்று அரக்கர்களாக இருந்தவர்கள் அரச குடும்பமாகவும், அரச குடும்பமாக இருந்தவர்கள் அரக்கர்களாக மாறுகின்றனர்.

‘டேய்  சுரேஷ் வெளியே வாடா இப்போ’ ; ஆத்திரத்தில் வெடித்த ஷனம் ஷெட்டி :அனல் பறக்கும் ப்ரோமோ

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சுரேஷ் கையில் வைத்திருந்த செங்கோலால் ஷனம் ஷெட்டியின் தலையில் அடித்து விடுகிறார். இதனால் கடுப்பான ஷனம் ஷெட்டி, கொஞ்சம் போச்சுன்னா கண்ணு போயிருக்கும். அந்த ஆளு கொடுப்பானா ? என்று கத்துகிறார்.

‘டேய்  சுரேஷ் வெளியே வாடா இப்போ’ ; ஆத்திரத்தில் வெடித்த ஷனம் ஷெட்டி :அனல் பறக்கும் ப்ரோமோ

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ஷனம் ஷெட்டி, டேய் வெளியே வாடா என்று கத்துகிறார் . ஆனாலும் இதற்கெல்லாம் அசராத சுரேஷ் பெட்ரூமில் படுத்தபடி சிரிப்பது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் வேண்டுமென்று ஷனம் ஷெட்டியை பற்றி மோசமான வார்த்தைகளால் பேசி வெறுப்பேற்றிய சுரேஷ் இன்று அவரிடமிருந்து பதிலடி வாங்கும் படியான இந்த ப்ரோமோ புருவத்தை உயர்த்துகிறது.