12ம் வகுப்பு பொதுத்தேர்வு… நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிப்பு!

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு… நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிப்பு!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்விம் அடிப்படையில் தேர்வு நடத்துவதா? இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால், தமிழகத்தில் தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு… நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிப்பு!

இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெற்றோர் நலச் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், மாணவ அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக் கேட்டு இரண்டு நாட்களில் அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இமெயில் மூலம் கருத்து கூறுமாறு அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுடன் நாளை மாலை 4 மணியளவில் ஆலோசனை நடத்தப்படும். நாளை மாலை 5 மணியளவில் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் நல சங்கத்தினருடனும் ஆலோசனை நடத்தப்படும். இதன் முடிவுகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு தேர்வு ரத்து செய்யப்படுகிறதா? இல்லையா? என்ற இறுதி முடிவை நாளை மறுநாள் முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.