’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

 

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

புதிய டாஸ்க், புதிய அணிகள், மீண்டும் எட்டிப் பார்க்கும் நேசம், போலியான ஆனா உற்சாகமான சண்டைகள், ப்ளாஸ் பேக் புதிய நடிப்புக் காட்சிகள்.. என மாறுபட்ட எப்பிசோட்டாக இருந்தது நேற்றையது.

44 –ம் நாள்

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

‘பாண்டி நாடு கொடியைப் போல…’ என உற்சாகமாக பாட்டை ஒலிக்க விட்டார் தம்பி. ஆனா, டான்ஸ் ஆட எழுந்தவங்க சுத்தி ஸ்கிரீன் போட்டு அடைச்சிருந்ததைப் பார்த்து ஜெர்க் ஆனாங்க. பிறகு சுதாரிச்சிகிட்டு பெட் மேல, அங்க இங்கன்னு ஆடி ஒப்பேத்தினாங்க.

வெளியே கடிகாரத்தின் மாடல்போல பெரிசா வைச்சிருந்தாங்க.. பக்கத்துலேயே ரயில் இஞ்சின் போல செட்டிங் வேற… இன்னிக்கு என்ன ஏழரையை கூட்ட இருக்கிறாரோ இந்த பிக்கி என ஹவுஸ்மேட்ஸ் யோசிச்சிட்டே இருக்கையில் கூப்பிட்டுறாரு.

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

ஹவுஸ்மேட்ஸ் 5 அணிகளா பிரிச்சிட்டாராம். ஒவ்வோர் அணியில் அந்தக் கடிகாரத்தில் நின்னு ஒவ்வொரு நொடியா எண்ணி 3 மணி நேரத்தைச் சரியாக கண்டுபிடிக்கனுமாம். அந்த நேரத்துல கொடுத்திருக்கும் டைம் டேபிள் படிதான் வீட்டு வேலை செய்யணுமாம். தவறிச்சுன்னா, லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்ணைக் குறைச்சிடுவாராம். அதைச் சொன்னதுமே நிஷாவின் முகம் சுளித்தது.

முதல் டீமில் ஷனம், நிஷா, அனிதா மூவரும் இருந்தனர். ஷனம்தான் கூவும் குயிலாக வந்து எல்லோருக்கும் டைம் சொல்லிட்டு போனார். காலை உணவை மதிய சாப்பாட்டு நேரத்துக்குத்தான் பிக்கி, ஷெட்யூல் பண்ணியிருந்தார். இரவு 2 மணி வரை டாஸ்க் வேறயாம். மனித உரிமை மீறுகிறார் பிக்கின்னு யாரும் புகார் கொடுக்காம இருக்கணும்.

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

இதற்கிடையில் அரை மணிநேரம் ஜிப்ரீஷ் மொழியிலதான் பேசணும்னு மினி டாஸ்க் கொடுத்தார் பிக்கி. நல்லாத்தான் இருந்தது. கேபி ஜிப்ரீஷ் மொழியிலேயே பாட்டெல்லாம் பாடினார். ‘பொழுதுக்கும் சமையக்கட்டுலேயே என்ன விட்டுடுறாங்க.. ஐயம் பாவம்’ என்பதாக கேமராவில் ஜிப்ரீஷ் மொழியில் கதறினார் நிஷா. ஆனா, கண்ணீர் வந்தது அந்த கேமரா மேனுக்குத்தான். ஜிப்ரிஷ் மொழியிலேயும் கருத்து சொல்ல ட்ரை பண்ணினார் ஆரி. (யேசப்பா…)

ஒரு வழியாக முதல் குழு 3 மணி நேர டாஸ்க்கை முடித்தது. அனிதா ரொம்ப டயர்டாராகி விட்டார் போல. சோகமாகப் போய் பெட்டில் படுத்துவிட்டார். இரண்டாம் டீம் ரம்யா, பாலா, சுசி. இன்னொரு பக்கம் ஸ்நாக்ஸ் அனுப்பவும் ஒரு டாஸ்க் வைத்தார் பிக்கி. நேத்து செம க்ரியேட்டிவ் (!!!!) மூடில் இருந்திருக்கிறார் போல. சுண்டல் விக்கிற டாஸ்க்காம். பாலா தான் சுண்டல் விக்கிற பையன். ரம்யா, ஆஜித் சேர்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் ‘என்ன பாய் ஃப்ரெண்டா? எனக் கொக்கிப் போட, ரம்யாவா மாட்டுற ஆள்… இல்லப்பா இது தம்பி என எஸ்கேபானார். ‘விக்கிறது சுண்டல்… ஆனா, போடறது கடல’னு சுர்ருன்னு ஒரு பன்ச் பேசினார் ஷனம். எப்போவாச்சும் கருத்தா பேசுது பொண்ணு.

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

மூன்றாம் குழு, ரியோ, ஆரி, கேபி. கேபி குக்கூவாகி பறந்துட்டு இருந்தார். பத்து நிமிடங்கள் குழாய்ல தண்ணீர் வரும் டாஸ்க். அர்ச்சனாவும் நிஷாவும் கேரக்டர்ஸாகவே மாறி தலைமுடியைப் பிடிச்சிகிட்டு செம ஆக்ட்டிங். நான் மட்டும் சும்மாவா…னு அனிதாவும் கோதாவில் குதிக்க ரணகளமானது. ஆனா, இந்த சும்மா சண்டையில சொன்ன வார்த்தையைப் பிடிச்சிகிட்டுகூட அனிதான் நாளைக்கு நிஜ சண்டையை ஆரம்பிக்கலாம். (பிக்கியின் ப்ளானே அதுதானே) அப்பறம் ஷிவானியை வந்து சேர்ந்துகொள்ள கொஞ்சம் ஹைபை சண்டைக் காட்சியாக மாறிச்சு. ரம்யா தன்னை மறந்து விசிலடிச்சு ரசித்த காட்சியை மட்டும் சேவ் பண்ணியிருப்பாங்க ரம்யா ஆர்மி பாய்ஸ்.

மூன்றாம் டீம் 3.08 மணி நேரத்தை 3 மணியாகக் கணிச்சாங்க. மூன்றாம் டீம் ஓரளவு நேரத்தை நெருங்கி வந்திருந்தாங்க. நான்காவது டீம், சோம், சம்யுக்தா, அர்ச்சனா. பிக்கி, அடுத்த டாஸ்க்காக கருப்பு – வெள்ளைப் படக் காட்சிகள் போல நடித்து காட்ட ஆணையிட்டார்.

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

முதலில் வந்தது… ஜித்தன் ரமேஷ், நிஷா. ரமேஷ் ஒரு இண்ட்ரோ கொடுத்துட்டு போய் உட்கார்ந்திட்டார். நிஷாதான் பராசக்தி வசனத்தை தன் வாழ்க்கையோடு பொருத்தி நீளமாகப் பேசி மூச்சு வாங்கினாங்க.

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

இரண்டாவதாக வந்தது அனிதா, ஆரி. பெண் எம்.ஆர்.ராதாவா வந்து நிஜமாகவே அசத்தினார் அனிதா. சந்தடி சாக்கில் 15 பேர் இருக்கிற பிக்பாஸ் வீட்டில ரெண்டே ரெண்டு கக்கூஸ்தான் இருக்கு. நைட் 9.30 மணிக்கு எல்லோரும் சாப்பிடும் நேரத்தில பிக்பாஸ் டெலிகாஸ்ட் பண்ணி, எல்லோரும் ப்ரஷ் பன்ணிட்டு இருக்கிறதைக் காட்டீறீங்க…. என சிக்ஸர்களை விளாசினார் அனிதா. ஆசம் … ஆசம் அனிதா. இவ்வளவு திறமை இருக்கு… அந்த கோவம்தான் எல்லாத்தையும் கெடுக்குது. ஆரி இதில் அடக்கி வாசித்து, அனிதாநடிக்க நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். இல்லாட்டி அதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்குனு ஆரிக்கு தெரியாதா என்ன?

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

எம்.ஜி.ஆராக ரியோவும் சரோஜா தேவியாக கேபியும் வந்து வழக்கமான ஒரு சீனை நடிச்சி காட்டினாங்க. இருவரும் காதலர்களாக நடிக்க, திடீரென்று நம்பியாராக உள்ளே வந்தார் ஜித்தன் ரமேஷ். கேபியைக் குத்தியைக் கொன்றதும்… சூடான எம்.ஜி.ஆர்… என்ன செய்வார்… சண்டைதான். கத்தி சண்டைகள் நடக்க கொஞ்சம் கலகலப்பானது. எம்.ஜி.ஆராக ரியோ நடிப்பு நன்று.

அடுத்தடுத்த ஆட்களின் நடிப்பைக் காட்டாமல் வேறு பக்கம் வண்டியைத் திருப்பினார் பிக்கி. அங்கே பாத்ரூம் கிளினிங்கில் இருக்கும் பாலாவிடம் பேச்சுக்கொடுத்திட்டு இருந்தார் ஷிவானி. கடுப்பாகப் பேசுவதுப்போல பேசிவிட்டு, பிறகு கூல் செய்ய கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடவும் செய்தார் பாலா. நல்லா இருக்கே இந்த டெக்னிக். உதிர்ந்த மலர் மீண்டும் கிளைக்குத் திரும்ப ஆசைப்படுதோ?

’எம்.ஜி.ஆர்’ ரியோ, ’எம்.ஆர்.ராதா’ அனிதா… அப்ப நம்பியார் யாரு? – பிக்பாஸ் 44-ம் நாள்

ஏதோ ஒரு பாத்திரத்தை துலக்கக்கூடாதுனு பிக்கி சொல்லியிருப்பார் போல. அதுக்காக கேமராவைப் பார்த்து மிரட்டிட்டு இருந்தார் நிஷா.  இன்னொரு பக்கம், சப்பாத்திக்கு ஆஜித் பிசைஞ்சிட்டு இருந்த மாவை சுசி டக்கெனு பிடுங்கியதால் அவர் கோச்சிட்டு போல, ஆஜித்க்கு சப்போர்ட் பண்ணி கேபி மினி சண்டை போட, சுசி டக்குனு ஸாரினு தலையை கவிழ, பொழைச்சுப்போ என விட்டார்கள். இதெல்லாம் ஒரு சண்டையா? கிச்சனுக்கு இருந்த மரியாதையே போயிடுச்சு…

ரியோ தனது மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி, தரையில் இதயம் வரைந்து அதை மனைவிக்கு அன்பு பரிசா அனுப்பினார். அதை எக்ஸ்ட்ரா லைட்டிங் போட்டு படம் பிரிச்சிட்டார் பிக்கி.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.