டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம் – 4 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு?

 

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம் – 4 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன்108 ரன்கள் அடித்தார்.

இந்திய பவுலர்களில் தமிழகத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம் – 4 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு?

இந்திய அணி அடுத்து பேட்டிங் ஆடியபோது ரோஹித் சர்மா மற்றும் சுப்னம் கில் இருவரும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரோஹித் சர்மா 44, கில் 7 ரன்கள், புஜாரா, 25 ரகானே  37, மயங்க் அகர்வால் 38, ரிஷப் பண்ட் 23 என்கின்ற வரிசையில் ஆட்டமிழந்தனர். ஆனால் வாஷிங்டன் சுந்தர் – ஷர்துல் தாகூர் இருவரும் சேர்ந்து அதிரடியான பார்ட்னர்ஷிப் போட்டனர். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் தாக்கூர் 67 ரன்களையும் விளாசினர்.

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரித்து இறுதியாக இந்திய அணி 10 விக்கெட் விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் – ஹாரிஸ் இருவரும் ஓப்பனிங் இறங்கினர். டேவிட் வார்னர் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்பட்டது. அவர் உடல் தகுதி முழுமையாக தயாராக முன்பே ஆட்ட களத்தில் இறக்கி விடப்பட்டார் என்ற புகாரும் பார்வையாளர்களால் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்று அடித்து ஆட வேண்டும் என்ற முடிவோடு களம் இறங்கி இருப்பார் போல.

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம் – 4 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு?

அதனால் தொடக்கம் முதலே அவர் அடித்து ஆடத் தொடங்கினார். குறிப்பாக ஆட்டத்தின் 3-வது ஓவரை வீச வந்தார் முகமது சிராஜ். அவரை எதிர்கொண்டது டேவிட் வார்னர். முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் விட்டுவிட்டார். அடுத்து வந்த 3 பந்துகளிலும் தொடர்ச்சியாக பவுண்டரி விளாசி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 22 பந்துகளில் 20 ரன்களை விளாசியுள்ளார் டேவிட் வார்னர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் திட்டமிடல் என்பது அதிரடியாக ரன்களை சேர்த்து, அதாவது இந்திய அணிக்கு ஒரு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்து விட வேண்டும் என்பதே. அப்போதுதான் இந்திய அணியை அதற்குள் சுருட்ட முடியும். ஏனெனில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன நாளை மதிய இடைவேளைக்கு ஆஸ்திரேலிய அணி அதிகமாக ரன்களை குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கூட இருக்கலாம்.

இப்பொழுது இந்திய அணியை விட 54 ரன்கள் அதிகமாக ஆஸ்திரேலிய அணி இருக்கிறது எனவே 250 முதல் 350 என்கின்ற அளவில் அடித்தால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும். மீதமிருக்கும் ஒன்றரை நாட்களுக்குள் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வீழ்த்தி விட்டால் நான்காம் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அரை அரை நாளில் 250 – 350 ரன்கள் என்பது மிக அதிகமான ரன்கள். எனவே அதற்கு சாத்தியம் குறைவு.

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம் – 4 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு?

எனவே நாளை முழுவதும் ஆஸ்திரேலியா ஆடினால் 300 ரன்கள் எடுத்தால் 350 ரன்கள் இலக்கு என்ற என்ற கடினமான ஸ்கோரை இந்திய அணிக்கு நிர்ணயிக்க முடிவு செய்யக்கூடும். அதை இந்திய அணி கடைசி ஒரு நாளில் அடிப்பதற்கு சாத்தியம் மிகமிக குறைவு.

எனவே போட்டி ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டும் அல்லது போட்டி டிரா வாழவேண்டும் என்ற நிலையே இருக்கும். இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும். இது நோக்கியே இந்த போட்டி செல்கிறது.