’தோனியைப் போல ஆட விரும்புகிறேன்’ இப்படி ஆசைப்படும் வெளிநாட்டு வீரர் யார் தெரியுமா?

 

’தோனியைப் போல ஆட விரும்புகிறேன்’ இப்படி ஆசைப்படும் வெளிநாட்டு வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் போட்டிகளை உற்சாகமாகக் காணும் மனநிலைக்கு ரசிகர்கள் தயாராகி விட்டனர். இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கின்றன ஐபிஎல் திருவிழா தொடங்க.

ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை கோப்பையை வென்றது நினைவுக்கு வரும். அதற்கு முக்கியக் காரணம் நம் கூல் கேப்டன் மஹேந்திர சிங் தோனிதான் என்றால் மிகையில்லை.

’தோனியைப் போல ஆட விரும்புகிறேன்’ இப்படி ஆசைப்படும் வெளிநாட்டு வீரர் யார் தெரியுமா?

தோனியின் கூல் மனநிலை, வெறித்தனமான ஆட்டம் இதெல்லாம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விஷயங்கள். சென்னை ரசிகர்கள் அதனால்தான் தோனியை ‘தல’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

தோனியைப் போலவே ஆட ஆசைப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர்.

’தோனியைப் போல ஆட விரும்புகிறேன்’ இப்படி ஆசைப்படும் வெளிநாட்டு வீரர் யார் தெரியுமா?

அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் 132 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3231 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடக்கம். அதேபோல 78 டி20 போட்டிகளில் ஆடி 1409 ரன்களை எடுத்துல்ளார். இதில் 1 சதமும், 2 அரை சதங்களும் அடக்கம்.

ஐபிஎ போட்டிகளைப் பார்த்தால் இதுவரை 79 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1850 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 9 அரைசதங்களும் அடக்கம். 126 ஃபோர்களும், 87 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்.  

’தோனியைப் போல ஆட விரும்புகிறேன்’ இப்படி ஆசைப்படும் வெளிநாட்டு வீரர் யார் தெரியுமா?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமில் ஆடிக்கொண்டிருந்த டேவிட் மில்லர், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல் டீமில் இடம் பெற்றிருக்கிறார்.

இவர்தான் தோனியைப் போல ஆட ஆசைப்படுகிறார். தோனி தனது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல ஆடுகிறார். அதேபோல தன்னை வெளிப்படுத்தும் விதமும் சிறப்பானது. அனைத்தையும் விட ஒரு போட்டியை சிறப்பாக முடிக்கத் தெரிந்தவர். அவரைப் போலவே நானும் ஒரு போட்டியை வெற்றிகரமாக முடிக்கும்படியாக ஆட ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.