பெரியப்பாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சொந்த பெரியப்பாவே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

கஞ்சநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், இளைய மகள் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு தொடர் விடுமுறை விட்டதால் தொடர்ந்து வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்றனர். பள்ளி மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாணவியின் பெரியப்பா மாணவி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்கு வந்துள்ளார். 50 வயதுடைய அவர் சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றபோது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவர், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி சத்தம் போட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதையறிந்த அவர், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை மிரட்டிவிட்டு ஓடி விட்டார். இதையறிந்த பள்ளி மாணவியின் தாய் நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கொலை மிரட்டல், போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், அந்த பகுதியை சேர்ந்த பெரியோர்கள் சிலர் இந்த பிரச்சனையை பஞ்சாயத்து பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், போலீசார் மாணவியின் பெரியப்பாவை கைது செய்யாமல் விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தப்பியோடிய 50 வயது தம்பி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...