Home க்ரைம் வரதட்சணை கொடுமையால் மாமியாரை எரித்து கொன்ற மருமகள் கைது!

வரதட்சணை கொடுமையால் மாமியாரை எரித்து கொன்ற மருமகள் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மணியம் பள்ளத்தைச் சேர்ந்த ரமேஷ். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும், 9 மாத குழந்தையும் உள்ளது. இவர்களுடன் ரமேஷின் தாய் ராஜம்பாளும் வசித்து வந்துள்ளார். பிரதீபாக்கும் மாமியார் ராஜம்பாளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டில் வந்து உறங்கிக்கொண்டிருந் ராஜம்பாளை பிரதீபா மண்ணென்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜம்பாளை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே பிரதீபாவையும் போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும் இன்று காலை ராஜம்பாள் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், மாமியார் ராஜம்பாள் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் அவரை கொலை செய்ததாக பிரதீபா கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews