வீட்டில் நிர்வாணமாக.. ஆபாசப்படம் பார்க்க வற்புறுத்திய தந்தை மீது மகள் புகார்!

 

வீட்டில் நிர்வாணமாக.. ஆபாசப்படம் பார்க்க வற்புறுத்திய தந்தை மீது மகள் புகார்!

பாண்டிச்சேரியில் வசிக்கும் நபர் ஒருவர் மருத்துவமனையில் ஓப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் நிலையில், இவரது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். சமீப காலமாக தந்தையின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த அந்த இளம்பெண் தனது தாயாரிடம் கூறியிருக்கிறார். அதாவது, தந்தை ஆபாசப்படங்கள் பார்ப்பதையம் நிர்வாணமாக வீட்டில் துணி மாற்றுவதையும் சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவருடன் சண்டை போட்டுள்ளார். இருப்பினும் அதை ஒரு பொருட்டாக மதிக்காத அவர், இது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

வீட்டில் நிர்வாணமாக.. ஆபாசப்படம் பார்க்க வற்புறுத்திய தந்தை மீது மகள் புகார்!

ஒரு கட்டத்தில் அவர் தனது மகளை ஆபாசப்படம் பார்க்க சொல்லி வற்புறுத்தியதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அவரது மனைவி தட்டிக் கேட்க, மகளையும் மனைவியையும் கொடூரமாக தாக்கியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், போலீசாரிடம் அந்த மகள் தனது தந்தையை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தலைமறைவாக இருக்கும் அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.