இந்த ரெண்டு பொருள் சாப்பிட்டாலே, எதிரியை பெண்டு நிமித்தலாம்.

 

இந்த ரெண்டு பொருள் சாப்பிட்டாலே, எதிரியை பெண்டு நிமித்தலாம்.

ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் உணவு வகைகளில்  எனர்ஜி, புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்கல் நிறைந்திருக்கிறது .மேலும் இவை நம் உடலுக்கு கொடுக்கும் பலன்களும் மிக அதிகம்.  அதிலும் குறிப்பாக பேரிச்சை பழமும் ,வால் நட்டும் நல்ல இரும்பு சத்துள்ள உணவு பொருட்கள் .

இந்த ரெண்டு பொருள் சாப்பிட்டாலே, எதிரியை பெண்டு நிமித்தலாம்.

ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் முதல் வயதான காலம்வரை பல்வேறு காலகட்டங்களிலும் உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. இரத்தச் சோகை ஏற்படாமலும், அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் பி சத்து குறைவாகக் கிடைக்கும். பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அச்சத்தினை ஈடுகட்டலாம் என்பதுடன், கால்சியம், அயர்ன் சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும். எலும்புகள் பலம் பெறும்.

பேரீச்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.  நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை சாப்பிடலாம்.

அடுத்து   வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் (omega fatty acid) இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்னையை  குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு. மற்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது வால்நட்டின் சுவை சற்றே கசப்பாக இருக்கும். அதனால் இதன் சுவை பிடிக்காதவர்கள், பிடித்த உணவுகளுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

வால்நட்டில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.மேற்சொன்ன இரண்டு பொருட்களை  தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு உடலில் நல்ல பலம் பெற்று ,விளையாட்டுகளில் எதிரிகளை எளிதில் வீழ்த்தி விடலாம் .