”ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதி” – கூகுள் அறிமுகம்” !

 

”ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதி” – கூகுள் அறிமுகம்” !

இந்தியாவில் ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதி” – கூகுள் அறிமுகம்” !

ஆண்டிராய்ட் டிவியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான டிவிக்கள் ஆண்டிராய்ட் இயங்குதளத்துடன் தான் தற்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும் சில ஆண்டிராய்ட் பாக்ஸ் மற்றும் ஸ்டிக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், ஆண்டிராய்ட் டிவி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆண்டிராய்ட் டிவியை, பெரும்பாலானோர் மொபைல் டேட்டா மூலமாகவே பயன்படுத்துகின்றனர். இதனை மனதில் கொண்டு, அதில் டேட்டா சேமிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதி” – கூகுள் அறிமுகம்” !

இதன் மூலமாக செலவிடப்படும் அதே டேட்டாவில் ஆண்டிராய்ட் டிவியை மூன்று மடங்கு அதிகமாக பயன்படுத்த முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக ஆண்டிராய்ட் டிவி செட்டிங்ஸில் மாற்றம் செய்துள்ள கூகுள், டேட்டா அலெர்ட் என்ற புதிய வசதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம், திரையின் கீழ்புறத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு எவ்வளவு டேட்டா செலவிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலெர்ட் எப்போது நினைவுப்படுத்த வேண்டும் என்பதை பயன்படுத்துவோர் நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. அதாவது 100 எம்பி, 500எம்பி, 1 ஜிபி டேட்டா பயன்பாட்டை கடக்கும் போதெல்லாம் அலெர்ட் வரும் வகையில் செட்டிங் செய்துகொள்ளலாம் என தெரிகிறது.

”ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதி” – கூகுள் அறிமுகம்” !

இது மட்டுமின்றி, இந்த அலெர்ட்டை ஆஃப் செய்துகொள்ளலாம் என்றும் மேலும் புதிய ஹாட்ஸ்பாட் கைடு ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அதன் மூலம், மொபைல் ஹாட்ஸ்பாட்டில் டிவியை சுலபமாக இணைத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இது உதவிடும் என தெரிகிறது.

”ஆண்டிராய்ட் டிவியில் டேட்டா சேமிக்கும் வசதி” – கூகுள் அறிமுகம்” !

இந்த புதிய வசதிகள், வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தொடக்கக்கட்டமாக, சியோமி, டிசிஎல் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிராண்டான மார்க்கியூ ஆகிய ஆண்டிராய்ட் டிவிக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், பின்னர் படிப்படியாக மற்ற டிவிக்களில் கிடைக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  • எஸ். முத்துக்குமார்