ரம்ஜான் தொழுகையை வீட்டிலேயே நடத்துமாறு தாரூல் உலூம் மதரஸாவின் பத்வா அறிவிப்பு!

 

ரம்ஜான் தொழுகையை வீட்டிலேயே நடத்துமாறு தாரூல் உலூம் மதரஸாவின் பத்வா அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்தில் இருக்கும் தாரூல் உலூம் மதரஸா முப்திகளால் அளிக்கப்படுக்கப்படும் பத்வாக்களுக்கு இஸ்லாமியர்களிடையே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன் துணை வேந்தரான முப்தி அப்துல் காசீம் நொமானி என்பவரிடம் ஊரடங்கு அமலில் இருப்பதால் ரம்ஜான் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரம்ஜான் தொழுகையை வீட்டிலேயே நடத்துமாறு தாரூல் உலூம் மதரஸாவின் பத்வா அறிவிப்பு!

அதற்கு அவர், வெள்ளிகிழமை சிறப்புத் தொழுகையை வீடுகளிலேயே செய்வது போல ரம்ஜான் பண்டிகையையும் வீட்டிலேயே தொழுகையை நடத்தலாம் என்றும் இந்த நன்னாளில் வாழ்த்துக் கூறவேண்டி யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வரும் நிலையில், வரும் 24 அல்லது 25 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ரமலான் பண்டிகையின் போது எல்லாரும் ஒரு கூடி நடத்தும் தொழுகைக்கு இந்த ஆண்டு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து மக்களை காக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.