உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

 

உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

பெண்கள் பலர் சருமத்தை பளபளனுடன் வைத்துக் கொள்ள பல கெமிக்கல் க்ரீம்களையும், பொருட்களையும் பயன்படுத்துவர். ஆரம்பத்தில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் அந்த க்ரீம்கள் கடைசியில் அதன் வேலையை காட்டி விடும். அதனால், இயற்கையான பொருட்களே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். பால், மஞ்சள், தயிர் போன்ற வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே எளிதாக ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்த முடியும். அந்த வகையில் நமது வீட்டின் சமையல் அறையிலேயே இருக்கும் இரண்டே பொருட்களை வைத்து ஒரு சூப்பர் ஃபேஸ்பேக்கை எப்படி என்பது பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்…

உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

ஸ்ட்ராபெர்ரி, டார்க் சாக்லேட் தான் அந்த இரண்டு பொருட்கள். இது என்னடா.. சாப்பிடுற பொருளெல்லாம் வெச்சு எப்படி ஃபேஸ்பேக் போடுறதுன்னு யோசிக்கிறீங்களா.. அதில் இருக்கும் நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டால் அசந்தே போயிடுவீங்க.. ஸ்ட்ராபெர்ரி, டார்க் சாக்லேட்டின் விலையை போன்றே நற்குணமும் அதில் அதிகமாக இருக்கிறது.

உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

ஊட்டச்சத்துக்கள்:

பொதுவாக நமது உடலின் பளபளப்பு தன்மைக்கு வைட்டமின் சி மிக முக்கியம். அந்த ஊட்டச்சத்து ஸ்ட்ராபெர்ரியில் அதிமாக இருக்கிறது. இது நம் உடலில் இருக்கும் சுருக்கம், வயதான தோற்றம் உள்ளிட்டவற்றை சரி செய்ய உதவும். அதே போல இதில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம், டெட் செல்கள் என்று சொல்லப்படும் இறந்த செல்களை அகற்றுவதற்கு உதவி புரியும்.

உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

பராமரிப்பு:

டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சருமத்தில் உள்ள அழற்சி பண்புகளை குறைக்கவும் உதவி புரிகிறது. முகத்தில் எரிச்சல் நீங்குமாம். இதை ஸ்ட்ராபெர்ரியுடன் சேர்த்து முகத்தில் போடும் போது சருமம் இரண்டு மடங்கு பயன்பெறுகிறது.

உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

எப்படி பயன்படுத்துவது?

பெரும்பாலானோருக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி மாறும் டார்க் சாக்லெட்டை வைத்து எப்படி ஃபேஸ்பேக் தயாரிப்பது என்று இப்போது பார்க்கலாம். முதலில் டார்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறைப்படி உருக்கிக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு வானலியில் தண்ணீரை கொதிக்க விட வேண்டும். அதற்கு மேல் ஒரு பாத்திரம் வைத்து, அதில் சாக்லெட்டை போட்டு நீர் கொதிக்கும் சூட்டிலேயே சாக்லேட்டை உருக்க வேண்டும். அதை மசித்த ஸ்ட்ராபெர்ரியுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

உங்க ஸ்கின் சும்மா தகதகன்னு மின்னனுமா?.. இந்த ஒரு ஃபேஸ்பேக் போதும்!

பிறகு வெதுவெதுப்பான நீரால் நன்றாக முகத்தை கழுவிவிட்டு, இந்த பேஸ்ட்டை முகத்தில் போட வேண்டும். 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அதை 20 நிமிடங்கள் உலரவிட்டு மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.

இந்த ஃபேஸ்பேக் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, மிருதுவாக்கவும் செய்யும். அதுமட்டுமில்லாமல், உங்க முகத்தை சும்மா தகதகன்னு மின்னவைக்கும் இந்த ஸ்ட்ராபெர்ரி, டார்க் சாக்லேட் பேஸ்பேக்..