• February
    21
    Friday

Main Area

Main



ஒரே நாளில் வசூலை வாரி சுருட்டிய தர்பார்! 

தர்பார்
தர்பார்

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக  தமிழகத்தில் நேற்று வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு பின்னர் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்திருந்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. வெளியீட்டுக்கு முன்னரே உலகளாவிய தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் உரிமத்தில், ரூ .200 கோடி கிளப்பில்  ஏற்கனவே இணைந்துவிட்டது.

தர்பார்


இந்நிலையில் முதல்நாளில் மட்டும் தர்பார் படம் உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் சுமார் 60 கோடியும், இந்தி மொழியில், 12 கோடியும், தெலுங்கு திரையுலகில் 8 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தர்பார் சுமார் 17 கோடி வசூலை பெற்று சாதனைப்படைத்துள்ளது. சென்னையில் மட்டும் பாக்ஸ் ஆபிசில் 2. 25 கோடியை வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியான தர்பார், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வார நாட்களில் ஒரு படம் வெளியாகி இத்தனை கோடி வசூலை பெற்றது மிகப்பெரிய ரெக்கார்ட்தான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்...  மற்றும் வார இறுதிநாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறையின்போது இதைவிட கூடுதல் வசூலை தர்பார் அள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் தர்பார் படம் பேட்ட படத்தின் முதல்நாள் வசூலை பின்னுக்கு தள்ளி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

2018 TopTamilNews. All rights reserved.