Home லைப்ஸ்டைல் ‘சானிடரி நேப்கின்’களால் பெண்களுக்கு ஆபத்து – அதிர்ச்சித் தகவல்

‘சானிடரி நேப்கின்’களால் பெண்களுக்கு ஆபத்து – அதிர்ச்சித் தகவல்


பெண்களின் வாழ்வில் ‘மாதவிடாய்’ என்பது ஒருவகையான வேதனை நிறைந்த கால கட்டமாகும். இது பற்றிய போதிய விழிப்புணர்வு இந்தியப் பெண்களிடம் இல்லை என்பது அதனை விட வேதனைக்குறிய விஷயமாகும். இந்தியாவில், தற்போது 36 கோடிப் பெண்கள் மாத விடாய் காலத்தில் இருக்கின்றனர். இவர்கள் மாதவிடாய் காலத்தை தற்காலத்தைய நவீன ரக ‘சானிடரி

நேப்கின்’களின் உபயோகத்தால் சமாளித்து வருகின்றனர்.
இத்தகைய சானிடரி நேப்கின்களை 12 மணி நேரம் பயன்படுத்தலாம் என விளம்பரங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இது ஆபத்தானது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். காரணம் பெண்கள் சானிடரி நேப்கின்களை பயனபடுத்தும் பகுதியில் நுண்ணுணர்வு நரம்புகள் அதிகம் உள்ளன. விளம்பரங்களை நம்பி தொடர்ந்து, சானிடரி நாப்கின் பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கப்படும் என்கிறார்கள் அவர்கள்.இது மட்டுமல்ல…

பெரும்பாலான சானிடரி நேப்கின்கள் தயாரிக்கப்படும் விதமே ஆபத்து நிறைந்ததுதான் என்கிறார்கள் அவர்கள். பொதுவாக இன்றைய நேப்கின்களில் இருப்பது, ‘காட்டன்’ கிடையாது. ‘வுட் பல்ப்’ எனப்படும், மரக்கூழாகும். இந்த மரக் கூழை வெள்ளையாக மாற்ற, ‘குளோரைடு’ பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து, ‘டயாக்சின்’ வெளியாகிறது. இந்த டயாக்சின், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதோடு அதிக நேரம் தாக்கு பிடிக்க, ‘சோடியம் போலி அக்ரிலேட்’டை பயன்படுத்துகின்றனர். இந்த வேதிப்பொருளால், 30 சதவீதம் கூடுதல் தண்ணீரை உறிஞ்ச முடியும் .

ஆக இவை ரத்தத்தை உறிஞ்சுவதுடன், உடலில் இருந்து, ஈரத்தன்மையையும் உறிஞ்சுகிறது. இதனால், எரிச்சல், புண், உடல் பகுதியில் அதிக வெப்பம், நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் ‘நேப்கின்கள்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அபிராமி மேலும் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகிறார். மண்ணுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் போல் நவீன சானிடரி நேப்கின்களும் மிக ஆபத்தானவை என்கிறார் அவர்.
ஒரு சானிடரி பேட் மண்ணில் மக்குவதற்கு, 500 — 800 ஆண்டுகள் வரை ஆகும். ஒரு பெண், 15 — 50 வயது வரை, சுமார் 130 கிலோ சானிடரி நாப்கினை உபயோகிக்கிறார். இந்தியாவில், 355 மில்லியன் பெண்கள் மாத விடாய் காலத்தில் இருக்கின்றனர்.ஒவ்வொருவரும், தலா, 130 கிலோ வீசினால், சுற்றுச்சூழல் மாசு என்னவாகும்…? ஒரு சானிடரி பேட், நான்கு பாலித்தீன் கவருக்கு சமம். அதை எரிக்கும் போது, வேதிப்பொருட்கள் வெளியாகி, காற்று மாசடையும் .இதை ஏன் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.


சிவகாசியைச் சேர்ந்த 33 வயதான இந்த அபிராமி, கேரள மாநிலம், கோட்டையம் அருகே உள்ள சங்கனாச்சேரி, தனியார் மருத்துவமனையில், இயற்கை மருத்துவராக பணிபுரிகிறார். ‘சானிடரி பேட்’களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்குவதுடன், அதற்கு தீர்வாக, ‘பிறை’ என்ற அமைப்பு மூலமாக, துணியால், ‘கிரீன்மென்சுரேஷன் பேட்’ எனப்படும், சுகாதார காட்டன் பட்டைகளை உருவாக்கி, வினியோகம் செய்கிறார்.இதை, தண்ணீரில் ஊற வைத்து துவைத்தால், கறை போய்விடும். ஒரு பேடை, இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பழைய துணிகள் போல எரித்து விடலாம். மக்குவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் இராது என்கிறார் அவர்.
இத்தகைய சுகாதார காட்டன் பட்டைகளை தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்கள் முன்வரவேண்டும், பெண்களிடம் குறிப்பாக இளம்பெண்களிடம் சானிடரி நேப்கின்கள் பற்றி முழுமையான விழிப்புணர்வு வர வேண்டும் என்கிறார் மேலும் அவர்…

மாவட்ட செய்திகள்

Most Popular

கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம்… அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ள கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் எதிர்ப்போம் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு...

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...

காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...
Do NOT follow this link or you will be banned from the site!