Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் நீங்கள் குடிக்கும் சுத்தமான தண்ணீரில் ஆபத்து – உடனடியாக கிராமத்து ஸ்டைலுக்கு மாறுங்க..

நீங்கள் குடிக்கும் சுத்தமான தண்ணீரில் ஆபத்து – உடனடியாக கிராமத்து ஸ்டைலுக்கு மாறுங்க..


உங்களுக்கு நினைவிருக்கிறதா..? இப்போது நாம் பருகி வரும் மினரல் வாட்டர்களுக்கு முன்னால் ஒட்டு மொத்த தமிழர்களும் குடித்துத் வந்தது ஆற்றுத் தண்ணீர், கிணற்றுத் தண்ணீர், தெருக்குழாய் தண்ணீர்தான்..அந்தக் காலத்தில் இவை மாசு படாமல் இருந்தன..அப்படியே இரு கைகளாலும் அள்ளி அள்ளிக் குடிப்பார்கள். யாருக்கும் எந்த நோயும் வந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால எதிர்காலத்தில் தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டியது வரும் என யாரும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
சரி…இந்தக் காலத்திற்கு வருவோம்..பில்டர் வாட்டர், மினரல் வாட்டர்,ஆர்.ஓ வாட்டர் என இப்போது நாம் குடிக்கும் தண்ணீரால் நமது உடலுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை..அவை தாகத்தை தணிப்பதோடு சரி. ஒரு சொட்டு கூட உடலுக்கு எந்தவித நண்மையும் செய்வதில்லை. இது ஒரு பக்கம் இருக்க…இப்போது நாம் குடிக்கும் பாட்டில். மற்றும் வாட்டர் கேன் தண்ணீரால் நமக்கும், நமது குழந்தைகளுக்கும் பேராபத்துதான் காத்திருக்கிறது. நமது உடலில் உள்ள எலும்புகள் பலமாக இருக்கத் தேவை கால்சியம் இந்த கால்சியத்தில் தண்ணீரின் பங்கு பெரியதாகும்.. ஆனால் இப்போது நாம் குடிக்கும் தண்ணீரில் கால்சியம் மட்டுமல்ல எந்த சத்தும் இல்லாததால் நாளடவில் நமது உடல் நிலை சகல விதமான நோய்களையும் சந்தித்து தீராத வலியோடும் மருத்துவச் செலவோடும்தான் போய்ச் சேர வேண்டும்.


அப்படியானால் எந்த தண்ணீரைக் குடிப்பது…? சொன்னால் நம்ப மாட்டீர்கள்..தெருக் குழாய் தண்ணீர்தான் உடலுக்கு நல்லது..இந்த தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது. தெருக் குழாய் மூலம் நாம் பெறும் குடி நீரானது மேற்படி ஆறு, கிணறு மற்றும் குளத்தில் இருந்து வருவதாகும். ஆனால் அவை இப்போது மாசு பட்டு காணப்படுகின்றன. தெருக்குழாயில் வரும் தண்ணீரில் டி,டி,எஸ் அதிகமாக இருக்கிறது, தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் சில விஷயங்கள் இருக்கின்றன.


இது ஒன்றும் பெரிய விஷயமல்ல…தெருக்குழாய் தண்ணீரை பிடித்து இயற்கையான முறையில் சுத்திகரிப்பு செய்தால் நீங்கள் தூய்மையான தண்ணீர் பருகுவதோடு, உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.நமது முன்னோர்கள் எல்லாம் பயன் படுத்தி வந்தது மண் பானைத் தண்ணீர்தான் இதில் விஷயம் இல்லாமல் இல்லை.தண்ணீரில் உள்ள எப்பேற்பட்ட கிருமிகளையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு விடும்.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் தண்ணீரில் உள்ள அனைத்து கெட்டவைகளையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு மண் சக்தியை அளிக்கிறது. உலகத்திலேயே மிகச் சிறந்த ‘வாட்டர் பில்டர்’ மண் பானைதான் .தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் பிராண சக்தி அதிகரிக்கும் என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.


இதுவல்லாமல் இன்னொரு சிறப்புக் குடிதண்ணீர் இருக்கிறது.. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் செம்புப் பானை. செம்பு டம்ப்ளர்கள் இருந்தன. செம்புப் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள் செம்புக் கிளாசில் தண்ணீர் குடிப்பார்கள். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், முனிவர்கள் எல்லோருமே கையில் ஒரு செம்புக் கமண்டலம் வைத்திருப்பார்கள். அதில் தண்ணீரை வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது குடிப்பார்கள். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு ஒப்பற்ற சக்தி இருக்கிறது.
செம்புப் பாத்திரத்தில் 2 முதல் 5 மணி நேரம் வரை தண்ணீரை வைத்திருந்தால் அந்த தண்ணீர் சுத்தமாகி விடுவதோடு, அதிகப்படியான சக்தியும் கிடைக்கிறது. எனவே மினரல் வாட்டர்களுக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு, மண்பானை அல்லது செம்புத் தண்ணீர் குடிக்க பழகுங்கள். நீங்கள் மிகவும் பயந்தவராக இருந்தால் தெருக் குழாய் தண்ணீரை சுட வைத்து ஆறிய பிறகு குடிக்காலம்…இதன் மூலம் மட்டுமே உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஒன்றும் இல்லாத மினரல் வாட்டர்களை நம்பி உங்கள் உடலைத் தேய்மானத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள்
இர. சுபாஸ் சந்திர போஸ்.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!