Home தமிழகம் எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ... பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ… பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

சாதி மதம் இனம் கடந்து மக்கள் சகஜமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வரும் இக்காலகட்டத்தில் கூட, தமிழகத்தின் பல இடங்களில் இன்னமும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அண்மையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டியலின ஊராட்சி மன்றத்தலைவர் ஒருவரை கொடியேற்றி விடாமல் தடுத்து சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, பல சம்பவங்கள் தொடர்ச்சியாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், திருவெண்ணெய்நல்லூர் அருகேயும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ... பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!
எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ... பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 12ஆம் தேதி திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர். ஊரடங்கை மீறி அவர்கள் திருவிழா நடத்தியதால் காவல்துறையினர் மைக்செட் உள்ளிட்ட அனைத்தையும் கழற்றி கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து காவல் நிலையம் சென்ற அப்பகுதி மக்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், தங்களை மீறி திருவிழா நடத்தியதால் ஊரார் முன்னிலையில் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளட்டனர் அந்த கிராமத்தை சேர்ந்த 8 பேர். அதன் படி திருமால், சந்தானம், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். பட்டியல் இன மக்களை காலில் விழவைத்த இச்சம்பவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ... பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்தது.

திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்

மதுரை விக்கிரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றிய திமுக ஊராட்சி மன்றத் பெண் தலைவர் வீட்டிற்குள் ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று வீடு, கார் மீது...

2 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் மண்டலம் அனாஜ்பூரில் 2மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மேகதாது அணை கட்டும் முடிவை நிறுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய...
- Advertisment -
TopTamilNews