‘ஆவின் பாலில் சர்க்கரை கலந்த தண்ணீர் கலப்படம்’ : பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்!

‘ஆவின் பாலில் சர்க்கரை கலந்த தண்ணீர் கலப்படம்’ : பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆவின் கொள்முதல் நிலையங்களில், பாலில் சக்கரை தண்ணீர் கலப்பதாக புகார்கள் எழுந்திருக்கிறது. பாலை திருடிவிட்டு, அதனை ஈடுகட்ட தண்ணீர் கலப்பதாக கூறி செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘ஆவின் பாலில் சர்க்கரை கலந்த தண்ணீர் கலப்படம்’ : பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்!

அந்த அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் பாலினை திருடி விட்டு அதனை ஈடுசெய்ய சர்க்கரை கலந்த தண்ணீரை கலப்படம் செய்யும் காணொளி காட்சிகள் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை தருகிறது. குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் எவர் கலப்படம் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

‘ஆவின் பாலில் சர்க்கரை கலந்த தண்ணீர் கலப்படம்’ : பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்!

பாலில் கலப்படம் செய்து படுபாதக செயலில் ஈடுபட்ட நிகழ்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தென் மாவட்டங்களில் ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள், மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்பதை பலமுறை சுட்டிக் காட்டியும் இது வரை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

‘ஆவின் பாலில் சர்க்கரை கலந்த தண்ணீர் கலப்படம்’ : பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்!

இனியாவது மக்களுக்கு தரமான பால், கலப்படமின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஆவின் பால் தூயது, தரமானது என விளம்பரம் செய்வதோடு நிற்காமல் அதனை நடைமுறையில் செயல்படுத்திட கொள்முதல் நிலையங்கள், மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.