பாலை கொட்டியவர்கள் சேடிஸ்ட் என்றால், கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் யார்…? – ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்வி

 

பாலை கொட்டியவர்கள் சேடிஸ்ட் என்றால், கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் யார்…? – ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்வி

பாலை தரையில் கொட்டி போராடுபவர்கள் சாடிஸ்டுகள் என்றால், பால் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் யார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் (23.07.2020) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது “சாலையில் பாலை கொட்டி போராடுபவர்கள் சாடிஸ்ட்கள்” என பால் உற்பத்தியாளர்கள் மீது பகிரங்கமாக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாலை கொட்டியவர்கள் சேடிஸ்ட் என்றால், கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் யார்…? – ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்விதமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலினை ஊரடங்கு காரணமாக பால் விற்பனை குறைந்து விட்டது என பொய்யான காரணத்தைக் கூறி சுமார் 40% முதல் 60% வரை கொள்முதல் செய்ய மறுத்து திருப்பி அனுப்புவதோடு, வாரத்தில் இரண்டு நாட்கள் பால் கொள்முதல் செய்வதில் விடுமுறை விட்டு மொத்த உறுப்பினர்களிடமும் பாலினை கொள்முதல் செய்ய மறுத்து வருகிறது ஆவின் நிர்வாகம்.
கொரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு 5வது மாதத்தை எட்டவிருக்கும் சூழலில் வணிகம் சார்ந்த பால் விற்பனை என்பது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட ஊரடங்கினால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய் இருந்ததால் நேரிடையான பால் நுகர்வு என்பது கணிசமாக அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அதையே தான் ஆவின் நிர்வாகத்தின் அறிக்கைகளும், தமிழக அரசின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகத்தின் அறிக்கைகள் ஆவின் பால் விற்பனை மற்றும் கொள்முதல் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என தெரிவிக்கும் போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்ய மறுத்து திருப்பி அனுப்புவதும், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிப்பதும் ஏன்..? என்பதை தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

பாலை கொட்டியவர்கள் சேடிஸ்ட் என்றால், கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் யார்…? – ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்வி
அதுமட்டுமின்றி வணிகம் சார்ந்த பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை சுமார் 20.00ரூபாய் வரை குறைத்து வழங்கி வருகின்றன. அது போலவே ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் பாலிற்கு சுமார் 10.00ரூபாய் வரை விலை குறைத்து வழங்குவதாக பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் துறை சார்ந்த அமைச்சர் கடந்து செல்வது கடும் அதிர்ச்சியை தருகிறது.
மாட்டின் மடியில் இருந்து கறந்த பாலினை 6 மணி நேரத்திற்குள் பதப்படுத்தியாக வேண்டும், இல்லையென்றால் அந்த பாலில் கிருமிகள் சேர்ந்து கெடத் தொடங்கி விடும் அல்லது பதப்படுத்தாமல் நேரம் கடந்த பாலினை மக்கள் அருந்தினால் அது பல்வேறு உடல் உபாதைகள் வருவதற்கு வழி வகுத்து விடும் என்கிற நிலையில் வேறு வழியின்றி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலினை கொட்டி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாலை கொட்டியவர்கள் சேடிஸ்ட் என்றால், கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் யார்…? – ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்வி
எந்த ஒரு விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சாலையிலோ அல்லது குப்பையிலோ கொட்ட வேண்டும் என நினைப்பதில்லை. கொரோனா பேரிடர் காலத்திலும் கூட விவசாயம் சார்ந்த அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்குதடையின்றி உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில் அதனை கொள்முதல் செய்ய மறுத்து திருப்பி அனுப்புவதும், விடுமுறை அளிப்பதும் வேதனைக்குரியது.

பாலை கொட்டியவர்கள் சேடிஸ்ட் என்றால், கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் யார்…? – ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்விதமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் சூழலில் அதில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதோ வெறும் 3 5லட்சம் லிட்டர் மட்டுமே என்கிற நிலையில் ஆவினுக்கு பால் வழங்குபவர்களை மட்டும் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களாக பார்ப்பதோடு தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களை கண்டு கொள்ளாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்களே முக்கிய குற்றவாளிகள் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அப்படியானால் பாலினை சாலையில் கொட்டி போராடும் பால் உற்பத்தியாளர்கள் சாடிஸ்டுகள் என்றால் அவர்களை அந்த நிலைக்கு தள்ளிய ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் மற்றும் தமிழக அரசும் யார்…? என்பதை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்க வேண்டும்.
மேலும் கொரோனா பேரிடர் காலத்திலும் கூட விவசாயம் சார்ந்த அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்குதடையின்றி உற்பத்தி செய்து தரும் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களை சாடிஸ்டுகள் என்று விமர்சனம் செய்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.