”இந்தியாவிலிருத்து 35 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் ஏற்றுமதி – டெய்ம்லர் சாதனை ! ”

 

”இந்தியாவிலிருத்து 35 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் ஏற்றுமதி – டெய்ம்லர் சாதனை ! ”

இந்தியாவில் இருந்து 35 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் மற்றும் 15 கோடி வாகன பாகங்களை ஏற்றுமதி செய்து டெய்ம்லர் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஜெர்மனியை தலைமையகமாக கொண்டு செயல்படும் டெய்ம்லர் நிறுவனம், இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக வர்த்தக வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. சென்னை ஒரகடத்தில் தொழிற்சாலையை கொண்டுள்ள டெய்ம்லர் நிறுவனம், இங்கு, பாரத் பென்ஸ், மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
உலகெங்கிலும் பல நாடுகளில் தொழிற்சாலைகளை கொண்டிருந்தாலும் இந்தியாவில் டெய்ம்லர் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் தான், இன்ஜின்கள், டிரான்ஸ்மிஷன்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் ஆகியவை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

”இந்தியாவிலிருத்து 35 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் ஏற்றுமதி – டெய்ம்லர் சாதனை ! ”

இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு டெய்ம்லர் நிறுவனம் வர்த்தக வாகனங்கள் மற்றும் வாகன பாகங்களை கடந்த 2013ம் ஆண்டு முதல் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், 35 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக வாகனங்கள் மற்றும் 15 கோடிக்கும் அதிகமான வாகன பாகங்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனையை டெய்ம்லர் நிறுவனம் அடைந்துள்ளது.

”இந்தியாவிலிருத்து 35 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் ஏற்றுமதி – டெய்ம்லர் சாதனை ! ”

மேலும், அந்தந்த நாடுகளில் அசெம்பிள் செய்யும் வகையில், டெய்ம்லர் நிறுவனத்தின் இந்திய பிரிவு, வெளிநாடுகளில் அசெம்பிள் செய்ய வசதியாக, வாகனத்தின் அனைத்து பாகங்களையும் ஏற்றுமதி செய்தும் வருகிறது. தென்னாப்பிரிக்கா, கென்யா, வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து இந்த முறையில் வாகனத்தின் அனைத்து பாகங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவையும் இந்த நாடுகள் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்