5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.73 ஆயிரத்தை பறிகொடுத்த கூலித் தொழிலாளி: பரபரப்பு புகார்!

 

5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.73 ஆயிரத்தை பறிகொடுத்த கூலித் தொழிலாளி: பரபரப்பு புகார்!

ஈரோடு அருகே ரூ.5 லட்சம் வேண்டுமா? என தொலைபேசிக்கு வந்த அழைப்பை நம்பி கூலித் தொழிலாளி ஒருவர் ரூ.73 ஆயிரம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள அண்ணா புது காலனி பகுதியில் வசித்து வருபவர் ஆராயி. கூலித் தொழில் செய்து வரும் இவரது செல்போனுக்கு கடந்த மாதம் அழைப்பு விடுத்த பெண் ஒருவர், நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார். தங்களுக்கும் ரூ.5 லட்சம் லோன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.73 ஆயிரத்தை பறிகொடுத்த கூலித் தொழிலாளி: பரபரப்பு புகார்!

இதை நம்பிய ஆராயி, ஆயில் கம்பெனியில் வேலை செய்து வரும் தனது மகள் திருமலையின் மூலம் 5 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பிறகு, மீண்டும் ஒரு லட்சம் செலுத்தினால் தான் லோன் கிடைக்கும் என அந்த பெண் கூறியிருக்கிறார். அப்போதும் அது மோசடியில் ஈடுபடும் கும்பல் என்பதை அறிந்திடாத ஆராயி இரண்டு தவணைகளாக ரூ.30 ஆயிரம் மற்றும் 38 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல், அதோடு ஆராயிக்கு அழைப்பு விடுவிக்கவில்லை. இவர்கள் தொடர்பு கொண்ட போதும் சரிவர பதிலளிக்கவில்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆராயி தனது மகன் திருமலையுடன் வந்து ஈரோடு மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.