• April
    07
    Tuesday

Main Area

Main



சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பிப்.27 முதல் தினமும் விமான சேவை – அலையன்ஸ் ஏர் அறிவிப்பு

jaffna
jaffna

சென்னை: இலங்கையின் யாழ்ப்பணத்திற்கு சென்னையில் இருந்து பிப்.27 முதல் தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பணத்திற்கு சென்னையில் இருந்து பிப்.27 முதல் தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அலையன்ஸ் ஏர் இந்தத் துறையில் வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்குகிறது.

ttn

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைக்கு மட்டும் இயங்கி வந்த இந்த விமான நிறுவனம், தற்போது உலகளவில் சிறகுகளை விரிவுபடுத்தி சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வணிக விமான நடவடிக்கைகளைத் தொடங்கியது.

2018 TopTamilNews. All rights reserved.