8-01-2021 தினப் பலன்: துலாம் ராசிக்கு ஆதாயம் தரும் நாள் இன்று!

125

8 – 2 – 2021 வெள்ளிக்கிழமை, சர்வாரி, மார்கழி 24

நல்ல நேரம்: காலை 9.30 – 10.30. மாலை 4.30 – 5.30

இராகு காலம்: 10.30 – 12.00

எம கண்டனம்: மாலை 3 – 4.30

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

மேஷம் – மகிழ்ச்சி

இன்று அனுகூலமான தினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பண வரவு இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான தினமாக அமையும்!

ரிஷபம் – சாதகம்

இன்று சாதகமான தினமாக அமையும். தன்னம்பிக்கை வெளிப்படும். வேலையில், தொழிலில் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்!

மிதுனம் – சவால்

கடின உழைப்பு, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இன்றைய தினத்தை உங்களுக்கான நாளாக மாற்றிக் கொள்ள முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

கடகம் – கவனம்

இன்று வேலை, தொழிலில் கவனமாக இருப்பதன் மூலம் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க முடியும். மன அமைதி குலையலாம். மனதை சிதற விடாமல் ஆன்மிக காரியங்களில் திருப்புவதன் மூலம் பலன் பெற முடியும். மனக் குழப்பம் காரணமாக குடும்பத்தினருடன் மோதல் ஏற்படலாம். எனவே, கவனம் தேவை.

சிம்மம் – ஊக்கம்

உங்கள் திறமை காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். உற்சாக மிகுதி காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருப்தியான நாளாக அமையும்.

கன்னி – பொறுமை

இன்றைய தினம் பொறுமையாக இருப்பதன் மூலம் சாதகமாக்கிக்கொள்ளலாம். குடும்பம், வேலையில் பிரச்னைகள் ஏற்படலாம். திட்டமிட்டு கவனத்துடன் செயல்பட்டால் பிரச்னை இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.

துலாம் – ஆதாயம்

சவால்கள் மிகுந்த நாளாக இருந்தாலும் உங்களுக்கு ஆதாயமாகவே முடியும். இலக்குகள் நோக்கித் துணிவுடன் செயல்படுங்கள். பேச்சில் கவனம் தேவை. இல்லை என்றால் வேலையில், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னை உருவாகிவிடும். இருப்பினும் நம்பிக்கை, தைரியத்துடன் இருப்பீர்கள்.

விருச்சிகம் – நஷ்டம்

உங்கள் வளர்ச்சியில் தடை ஏற்படலாம். பதற்றப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். கடினமான காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். இன்று வீண் செலவு ஏற்படும். தவிர்க்க முடியாத வீண் செலவுகள் இன்று வந்து சேரும்.

தனுசு – வாய்ப்பு

உங்கள் திறமைக்கு மரியாதை கிடைக்கும். நண்பர்கள், சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். இருப்பினும் அனைவரிடமும் அமைதியாக பேசுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும்.

மகரம் – புகழ்

இன்று உங்கள் இலக்குகளை எளிதில் அடைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கும்பம் – பயம்

இன்றைய தினம் சற்று சவாலானதாகவே அமையும். பயம், பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே வேலையில், குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடும். உங்கள் செயல்பாடு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.

மீனம் – பிரமை

இன்று கடினமான சூழல் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் அமைதியாகக் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும். குழப்பமான மனநிலை இருக்கும். இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.