Home இந்தியா மும்பை ஓட்டலில் சடலமாக கிடந்த தாத்ரா மற்றும் நகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர்.. தற்கொலை என தகவல்

மும்பை ஓட்டலில் சடலமாக கிடந்த தாத்ரா மற்றும் நகர் ஹவேலி எம்.பி. மோகன் டெல்கர்.. தற்கொலை என தகவல்

மும்பை ஓட்டலில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி எம்.பி. மோகன் சஞ்சிபாய் டெல்கர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

பாரதி நவசக்தி கட்சி சேர்ந்த மோகன் சஞ்சிபாய் டெல்கர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 62 வயதான மோகன் சஞ்சிபாய் டெல்கர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். சில்வாஸாவில் பிறந்த டெல்கர் அடிப்படையில் விவசாயி.

மோகன் டெல்கர் குடும்பம்

தெற்கு மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் ஓட்டலில் எம்.பி. மோகன் சஞ்சிபாய் டெல்கர் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. போலீசார் மோகன் சஞ்சிபாய் டெல்கரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மோகன் சஞ்சிபாய் டெல்கர் தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் குஜராத் மொழியில் எழுதியிருந்ததாக போலீசார் தகவல்.

மோகன் டெல்கர் தங்கியிருந்த ஓட்டல்

மரைன் டிரைவ் போலீசார் இது தொடர்பாக கூறுகையில், தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் தெரியும் என்று தெரிவித்தனர். தாத்ரா மற்றும் நகர் ஹவேலியின் வரிஷ்தா பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் பதேஹ்சின் சவுகான் டிவிட்டரில், நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் எஸ் டெல்கர் காலமானத்தை அறிந்ததும் கற்பனைக்கு மேலாக அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டவை, நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து நின்றோம் என்று பதிவு செய்து இருந்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது உருமாறிய...

துணை வாக்குச்சாவடி மையங்களில், தஞ்சை ஆட்சியர் நேரில் ஆய்வு!

தஞ்சை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அர்ஜுன மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக சொன்னதும் பாஜகவில் இருந்து விலகி ரஜினியுடன் கைக்கோர்த்தார் அர்ஜூனமூர்த்தி. அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பும் கொடுத்த ரஜினிகாந்த், கடைசியில் கட்சியே தொடங்கவில்லை. உடல்நிலையை கருத்தில்...

ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர்...
TopTamilNews