அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தாதா சாகேப் விருது : டிடிவி தினகரன் வாழ்த்து!

 

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தாதா சாகேப் விருது : டிடிவி  தினகரன் வாழ்த்து!

2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் தாதாசாகேப் சர்வதேச திரைப்பட அமைப்பு விருதுகளை நேற்று அறிவித்துள்ளது. அதில் பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் என்ற பிரிவில் நடிகர் அஜித்குமாருக்கும் ,சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்திற்காக நடிகை ஜோதிகாவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தாதா சாகேப் விருது : டிடிவி  தினகரன் வாழ்த்து!

அதேபோல் சிறந்த இயக்குநருக்கான விருது ஒத்த செருப்பு படத்திற்காக இயக்குநர் பார்த்திபனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த படமாக டு லெட் படமும் தேர்வாகியுள்ளது.
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நடிகர்கள் அஜித், தனுஷ் உள்ளிட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/TTVDhinakaran/status/1345238317072150529

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய நடிகர்கள் அஜித் குமார், பார்த்திபன்,தனுஷ், ஜோதிகா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.