3 மாதங்களுக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்வு..எவ்வளவு தெரியுமா?

சர்வதேச எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லா சிலிண்டரின் விலை கூடும் அல்லது குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.590க்கு விற்கப்பட்டு வந்த மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து சிலிண்டர் விலை உயிர்த்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் 55 ரூபாயும், ஏப்ரல் மாதம் 65 ரூபாயும் குறைந்து ரூ.761.50 ஆக விற்கப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து மே மாதம் சிலிண்டர் விலை ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 3 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், இந்த மாதம் ரூ.11.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ.606.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Most Popular

இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறும் எந்த நபரையும் பொதுமக்கள் நம்பவேண்டாம் : வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி வேலூரில் மேலும் 139...

மதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. அதற்காக ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 15,810 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

டெல்லியில் ஜெ. பி. நட்டா தலைமையில் இன்று மாலை பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்

திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் இன்று மாலை பாஜகவில் இணைகிறார். சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும்...