சிலிண்டர் விலை உயர்வு: திமுக போராட்டம் அறிவிப்பு!

 

சிலிண்டர் விலை உயர்வு: திமுக போராட்டம் அறிவிப்பு!

15 நாட்களில் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு: திமுக போராட்டம் அறிவிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொறுத்து மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தின் போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிலிண்டர் விலை குறைந்திருந்தது. அதன் பிறகு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையில் கடந்த சில மாதங்களாக மாற்றங்கள் பெரிதாக இல்லை.

சிலிண்டர் விலை உயர்வு: திமுக போராட்டம் அறிவிப்பு!

இதையடுத்து, இந்த மாதத் தொடக்கத்தில் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு டிசம்பர் மாதத்திற்கான விலை ரூ.660 என நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை ரூ.710க்கு விநியோகம் செய்யப்படுகிறது. 15 நாட்களில் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து திமுக மகளிரணி வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.