இனிமேல் வாட்ஸ் ஆப் மூலமாகவே சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம்.. முழு விவரம் உள்ளே!

இனிமேல் வாட்ஸ் ஆப் மூலமாகவே சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம்.. முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கொரோனாவால் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 4,706 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 71,000 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் மக்கள் இருந்து வரும் நிலையில், வாட்ஸ் ஆப் மூலமாகவே சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்யும் புதிய அம்சத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இனிமேல் வாட்ஸ் ஆப் மூலமாகவே சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம்.. முழு விவரம் உள்ளே!

பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்கள் வழக்கமாக சிலிண்டர்கள் பெற பதிவு செய்து வைத்துள்ள செல்போன் எண் மூலம் 1800224344 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் சிலிண்டர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவுடன், புக்கிங்கை உறுதிப்படுத்த வாடிக்கையாளர்களின் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்படுமாம்.

இனிமேல் வாட்ஸ் ஆப் மூலமாகவே சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம்.. முழு விவரம் உள்ளே!

அதன் பின்னர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, UPI அல்லது இதர டிஜிட்டல் தளங்கள் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டிய லிங்க் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுமாம். மேலும், சிலிண்டர் எப்போது டெலிவரி செய்யப்படும் என்று வாடிக்கையாளர்கள் டிராக் செய்து கொள்ளும் வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.