வங்கக்கடலில் உருவாகவுள்ள புரெவி புயல் இங்கு தான் கரையை கடக்கும்!

 

வங்கக்கடலில் உருவாகவுள்ள புரெவி புயல் இங்கு தான் கரையை கடக்கும்!

வங்கக்கடலில் உருவாகவுள்ள புரெவி புயல் டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஆயிரத்து 40 கிலோமீட்டர் கிழக்கு திசையில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.

வங்கக்கடலில் உருவாகவுள்ள புரெவி புயல் இங்கு தான் கரையை கடக்கும்!

தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டாம் தேதி மாலை அல்லது இரவு கரையை கடக்கும். இலங்கையிலுள்ள திரிகோணமலைக்கு அருகே இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து மூன்றாம் தேதி காலை குமரி கடலுக்கு வரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.