“கிட்னி வாங்கலையோ கிட்னி” -ஆன்லைனில் கிட்னி விற்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“கிட்னி வாங்கலையோ கிட்னி” -ஆன்லைனில் கிட்னி விற்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு பெண் தன்னுடைய கடனை அடைக்க,ஆன்லைனில் தன்னுடைய கிட்னியை விற்க போன போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் கிட்னியை விற்க துடிக்கும் பலருக்கும் ஒரு பாடமாக அமையும்

“கிட்னி வாங்கலையோ கிட்னி” -ஆன்லைனில் கிட்னி விற்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஆந்திராவின் விஜயவாடாவில் வசிக்கும் என் பார்கவி மற்றும் எம் சத்யன்ரியானா ஆகியோர் யனமலகுதுருவில் ஒரு மருந்து கடை நடத்தினார்கள் .அப்போது அந்த தொழிலில் பார்ட்னர்களுடன் ஏற்பட்ட பண தகராறில் அவர்கள் கடனாளியானார்கள் .இதனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டவும் ,கடனை அடைக்கவும் அவர்கள் பார்கவியின் கிட்னியை விற்க முடிவெடுத்தார்கள் .
அதனால் ஆன்லைனில் தன்னுடைய கிட்ணியை விற்க பார்கவி தேடிய போது, டெல்லியில் சக்ரா உலக மருத்துவமனையில் சோப்ரா என்பவரை தொடர்புகொண்டார் . அவர் இவரின் கிட்னியை 2 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்வதாக கூறினார் .இதனால் அவரின் பேச்சை நம்பி அவர் டெல்லிக்கு சென்று அவரை சந்தித்து பேசிய போது அவர் பரிவர்த்தனை கட்டணமாக பல தவணைகளில் இந்த பெண்ணிடம் 17 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார் .இதனால் அந்த பெண் பார்கவி அவரிடம் எப்போது என்னுடைய கிட்னியை எடுத்துக்கொள்வீராகள் எப்போது இரண்டு கோடி ரூபாயை தருவீர்கள் என்று கேட்ட போது அதற்கு சோப்ரா இன்னும் ஐந்து லட்ச ருபாய் பணம் கொடுக்க சொன்னார் .
இதனால் அந்த பெண் பார்கவி பொறுக்க முடியாமல் அந்த நபர் மீது 17 லட்ச ரூபாயினை ஏமாற்றியதாக போலீசில் புகார் கொடுத்தார் .காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைது செய்ய விசாரணையைத் தொடங்கினர்.

“கிட்னி வாங்கலையோ கிட்னி” -ஆன்லைனில் கிட்னி விற்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி