திருட்டு பைக்குகளை உருமாற்றி Olx மூலம் விற்பனை செய்த பலே கில்லாடி கைது!

 

திருட்டு பைக்குகளை உருமாற்றி Olx மூலம் விற்பனை செய்த பலே கில்லாடி கைது!

சென்னை கொளத்தூர் என்விஎம் நகரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தனது பைக்கை வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது அவரின் பைக் திருடு போயிருந்தது. இது குறித்து வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்க வழக்குபதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அங்கு மப்டியில் கண்காணித்து வந்தனர்.

திருட்டு பைக்குகளை உருமாற்றி Olx மூலம் விற்பனை செய்த பலே கில்லாடி கைது!

அப்போது நேற்று காலை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு எதிரில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதை போலீசார் கவனித்தனர், அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும், இவர் வில்லிவாக்கம்,கொரட்டூர், அயனாவரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் திருடிய பைக்குகளை உருமாற்றி அதை
Olx மூலம் விற்பனை செய்து வந்துள்ளார்.

திருட்டு பைக்குகளை உருமாற்றி Olx மூலம் விற்பனை செய்த பலே கில்லாடி கைது!

இதை தொடர்ந்து அவரிடம் சுமார் 12 பைக்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.