விவாகரத்தான பெண் -வலைவிரித்த என்ஜினியர் -கல்யாண வெப்சைட்டில் நடந்த மோசடி .

 

விவாகரத்தான பெண் -வலைவிரித்த என்ஜினியர் -கல்யாண வெப்சைட்டில் நடந்த மோசடி .

அமெரிக்க என்ஜினியர் என்று பொய் சொல்லி ஒரு பெண்ணிடமிருந்து பத்து லட்ச ரூபாய் ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர் .

விவாகரத்தான பெண் -வலைவிரித்த என்ஜினியர் -கல்யாண வெப்சைட்டில் நடந்த மோசடி .

ஹைதராபாதில் உள்ள பெகம்பேட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் 34 வயது பெண் ஒருவர், தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டு  ஆறு வயது மகனோடு தனியே வசிக்கிறார் .இந்நிலையில் அவர் மேட்ரிமோனியல் போர்ட்டலில் மீண்டும் இரண்டாவது திருமனம் செய்து கொள்ள தன்னுடைய விவரங்களை பதிவு செய்திருந்தார்

அதை பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மெஹுல் குமார் என்பவர் அந்த பெண்ணோடு ஆன்லைனில் தொடர்பு கொண்டு பேசினார் .அப்போது அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ,விரைவில் இந்தியாவுக்கு வந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார் .அதை நம்பிய அந்த பெண் அவரோடு பேசி வந்தார் .

பிறகு அந்த  குமார் அந்த பெண்ணிடம் ஒரு நாள் தன்னுடைய குஜராத் வீட்டை புதுப்பிக்க இருப்பதாக கூறி  ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டார் .உடனே அந்த  பணத்தை அந்த பெண் அவருக்கு அனுப்பினார் .பிறகு அவர் சில நாள் கழித்து பல நகைகள்  மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை அவருக்கு அனுப்பியதாகவும் அது கஸ்டம்ஸில் டூட்டி காட்டாமல் சிக்கிவிட்டதாகவும் அதை உடனே டூட்டி கட்டி மீட்டு கொள்ளவும் என்று சில போட்டோக்களை அனுப்பினார் .

அதை பார்த்து ஆசைப்பட்ட அந்த பெண் அவர் சொன்ன நபரிடம் பல தவணைகளில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கொடுத்தார் .ஆனால் அவர் மேலும் பணம் கேட்கவே சந்தேகப்பட அவர் போலீசில் அவர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .