“உங்க அந்தரங்கம் வெளிவராமலிருக்க அக்கௌண்டுக்கு பணம் அனுப்பு” -உஷார் !ஊடக கணக்கில் ஊடுருவி மிரட்டும் கூட்டம் .

“உங்க அந்தரங்கம் வெளிவராமலிருக்க அக்கௌண்டுக்கு பணம் அனுப்பு” -உஷார் !ஊடக கணக்கில் ஊடுருவி மிரட்டும் கூட்டம் .

உத்தரபிரதேசத்தின் மீரட் மற்றும் ஷாம்லி மாவட்டத்தில் நடந்த ஈ மெயில் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

“உங்க அந்தரங்கம் வெளிவராமலிருக்க அக்கௌண்டுக்கு பணம் அனுப்பு” -உஷார் !ஊடக கணக்கில் ஊடுருவி மிரட்டும் கூட்டம் .

உ.பி .யின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் தீபக் என்பவர் உத்தரகண்ட் தலைநகர் டெஹ்ராடூனில் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மின்னஞ்சல் ஐடியிலிருந்து(ஈ மெயில் ) ஒரு மின்னஞ்சல் செய்தியைப் பெற்றார்.அதில் “நான் உங்கள் மின்னஞ்சலை பல நாட்களாக கண்காணித்து வருகிறேன். சில வலைத்தளங்களை நீங்கள் தேடியுள்ளீர்கள், இதன் மூலம் நான் உங்கள் மின்னஞ்சல் ஐடியை கண்காணித்தேன் . இப்போது, ​​உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து விவரங்களையும் நான் பார்க்க முடியும் . “என்று ஒரு மிரட்டல் மெயில் வந்தது

மேலும் அந்த மெயிலில் தான் கொரானா ஊரடங்கால் தனது வேலையை இழந்துவிட்டதாகவும், அதனால் தனக்கு பணம் தேவை என்றும் தீபக்கிடம் அந்த மெயிலில் கூறினார். பின்னர் அவர் தீபக்கின் ரகசியங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ .93,000 பணத்தை தனது அக்கௌண்டுக்கு அனுப்புமாறு தீபக்கிடம் கேட்டார்.

இந்த மோசடி பற்றி அந்த தீபக் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார் .அப்போது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய சைபர் க்ரைம் அதிகாரி கூறுகையில், “இதே போல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த மின்னஞ்சல் ஐடிகளிலிருந்து இது போல மிரட்டல் செய்திகளைப் பெறுகிறார்கள் இத்தகைய மின்னஞ்சல்கள் ஸ்பூஃபிங் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஏமாற்றுக்காரர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து இப்படி மெயில் அனுப்புகிறார்கள்”என்றார் .

மேலும் இதேபோல ஸ்பூஃப் மின்னஞ்சல் சேவைகளுக்காகவே சில வலைத்தளங்கள் உள்ளன. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து மெயில் அனுப்புகிறார்கள்.இதேபோல மோசடி புகார் வந்த இரு வழக்குகளையும் சைபர் க்ரைம் விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்

“உங்க அந்தரங்கம் வெளிவராமலிருக்க அக்கௌண்டுக்கு பணம் அனுப்பு” -உஷார் !ஊடக கணக்கில் ஊடுருவி மிரட்டும் கூட்டம் .