சவால் விடும் ‘பப்ஜி மதன்’… சைபர் கிரைம் போலீசார் தீவிர வேட்டை!

 

சவால் விடும் ‘பப்ஜி மதன்’… சைபர் கிரைம் போலீசார் தீவிர வேட்டை!

மதன் மற்றும் டாக்சிக் மதன் என்னும் யூடியூப் சேனல்களை நடத்தி வரும் மதன், பப்ஜி கேமை சொல்லிக் கொடுப்பதன் மூலம் பிரபலமானவர். எனினும், லைவ் வீடியோக்களின் போது இவர் ஆபாசமாக பேசியது சர்ச்சையை கிளப்பியது. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல இடங்களில் இவருக்கு எதிராக புகார்கள் குவிந்தது. இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் மதனுக்கு உத்தரவிட்டனர்.

சவால் விடும் ‘பப்ஜி மதன்’… சைபர் கிரைம் போலீசார் தீவிர வேட்டை!

ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத மதன் தலைமறைவாகினார். போலீசார் தன்னை கண்டறிய இயலாத அளவுக்கு விபிஎன் எனப்படும் ஐபி முகவரியை பயன்படுத்தி வருகிறார். இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், எப்போதும் போல கேமில் பங்கேற்று விளையாடி வரும் மதன் காவல்துறையால் என்னை கைது செய்ய முடியாது என்றும் தன்னுடன் விளையாடி வரும் திமுக எம்எல்ஏ கதிரவனின் மகனின் உதவி தற்போதைக்கு தேவையில்லை என்றும் இந்தப் பிரச்சனையை தானே பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

பப்ஜி விளையாட்டின் போது ஆபாசமாக பேசியது மட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடுவது, அதில் 18 வயதுக்கு உட்பட்டோரை பயன்படுத்தியது போன்ற குற்றச்செயல்களில் சிக்கியிருக்கும் மதன், காவல்துறையினருக்கு சவால் விடுவது போல பேசி வருவதால் அவரை கைது செய்வதில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் முடக்க திட்டமிட்டுள்ளனர்.