சென்னையில் சைபர் பிரிவுகள் நாளை முதல் தொடக்கம்!

 

சென்னையில் சைபர் பிரிவுகள் நாளை முதல் தொடக்கம்!

சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவல் சூழலை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டி சைபர்க்ரைம் குற்றங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்களால் பல நிறுவனங்களின் பலவீனப்படுத்தப்பட்ட பாதுகாப்பை ஹேக்கர்கள் பயன்படுத்தி கொண்டனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் கார்ப்பரேட் நெட்வொர்க்குகள் பலவீனமாகி ஹேக்கர்களின் வேலையை எளிதாக்குகிறது.

சென்னையில் சைபர் பிரிவுகள் நாளை முதல் தொடக்கம்!

சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் 12 காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சைபர்புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும். சைபர் பிரிவுகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதுடன் நிபுணர்கள் ஆலோசனை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான,சிக்கலான புகாரை இந்த பிரிவிலிருந்து மத்திய குற்ற பிரிவின் சைபர் பிரிவுக்கு பரிந்துரை செய்வர் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.