2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

 

2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. கருணாநிதி சாதிக்காததைச் சாதித்திருக்கிறார் ஸ்டாலின். மற்றொரு புறம் ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாமல் 75 தொகுதிகளைப் பெற்று பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக எதிர்வரிசையில் அமரப் போகிறது அதிமுக கூட்டணி.

2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் எப்போதுமே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்குத் தான் மவுசு அதிகம். அதிலும் குறிப்பாக இம்முறை டைம்ஸ்நவ்-சிவோட்டர் கருத்துக்கணிப்புகளேயே அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

2016 தேர்தலில் அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் திமுக ஆட்சியமைக்கும் என்று சொன்னபோது டைம்ஸ்நவ்-சிவோட்டர் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறியது. அந்நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட் படியே சரியாக 136 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

டைம்ஸ்நவ்-சிவோட்டர்

திமுக கூட்டணி – 160-72 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 58-70 தொகுதிகள்

அமமுக – 0-4 தொகுதிகள்

ரிபப்ளிக்-சிஎன்எக்ஸ்

திமுக கூட்டணி – 160-170 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 58-68 தொகுதிகள்

அமமுக – 4-6 தொகுதிகள்

மநீம – 0-2 தொகுதிகள்

2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

இந்தியா டுடே

திமுக கூட்டணி – 175-195 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 38-54 தொகுதிகள்

அமமுக – 1-2 தொகுதிகள்

மநீம – 0-2 தொகுதிகள்

2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

டுடேஸ் சாணக்யா

திமுக கூட்டணி – 164-186 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 46-68 தொகுதிகள்

மற்றவை – 0

தந்தி டிவி

திமுக கூட்டணி – 133 தொகுதிகள்

அதிமுக கூட்டணி – 68 தொகுதிகள்

கடும் போட்டி – 33 தொகுதிகள்

2021 கருத்துக்கணிப்பிலும் சிவோட்டர் சொன்னது பலித்ததா?

மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் சிவோட்டர் மட்டுமே வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. அதிமுகவிற்கு 70 தொகுதிகளை அதிகபட்சமாகக் கொடுத்திருந்தது. திமுகவிற்கோ 172 வரை கொடுத்திருக்கிறது. ஆனால் குறைந்தபட்சமாக 160 கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிவோட்டர் ஓரளவு துல்லியமாக ரிப்போர்ட் அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கருத்துக்கணிப்புகளை விட அதிமுகவிற்கு 5 தொகுதிகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. இம்முறையும் சிவோட்டரின் கருத்துக்கணிப்பு பலித்திருக்கிறது.