‘இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள் என நிரூபிக்க ஆதாரம் உண்டு’ விக்னேஸ்வரன் எம்.பி

 

‘இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள் என நிரூபிக்க ஆதாரம் உண்டு’ விக்னேஸ்வரன் எம்.பி

சமீபத்தில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையானது. அதற்கு சரியான பதிலை அளித்துள்ளார் விக்னேஸ்வரன்.

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ் எம்பி விக்னேஸ்ரவன் இம்மாதம் 20-ம் தேதி பேசினார்.

‘இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள் என நிரூபிக்க ஆதாரம் உண்டு’ விக்னேஸ்வரன் எம்.பி

அவரின் பேச்சின் தொடக்கமே, ‘உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களிம் மொழி தமிழ்’ என்பதாகப் பேசினார். இது பல ஊடகங்களில் வெளியானது.

சி.வி. விக்னேஸ்வரனின் பேச்சுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் இறையாண்மையை காப்பாற்றுவேன் என சத்தியம் செய்துவிட்டு, பிரிவினை பேசுவதா. நாட்டின் பூர்வீக குடிமக்கள் யார் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அது சபை குறிப்பில் இடம்பெறுவதா? என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

‘இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள் என நிரூபிக்க ஆதாரம் உண்டு’ விக்னேஸ்வரன் எம்.பி

இந்த  விவகாரம் குறித்து அவ்வப்போது யாரேனும் கருத்து தெரிவித்துக்கொண்டே உள்ளன. இது குறித்து பேட்டியொன்றில் பேசிய விக்னேஸ்வரன், ’பல அறிஞர்களுடன் கலந்துரையாடியும் பல்வேறு புத்தகங்களைப் படித்துமே நாடாளுமன்றத்தில் என் பேச்சில் நில உரிமை பற்றி கூறினேன். இலங்கையில் ஆதிக்குடிமக்கள் தமிழர்கள் என்று நான் பேசியதை நிருபிக்க தம்மிடம் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், ‘முள்ளிவாய்க்காலில்தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், தாங்கள் கள்ளித்தோணிகள் அல்ல’ என்றும் தெரிவித்துள்ளார்.