தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு- அமைச்சர் சி.வி. சண்முகம்

தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு- அமைச்சர் சி.வி. சண்முகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சாத்தாகுளம் தந்தை, மகன் மரண வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் அளித்த பெண் காவலரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு- அமைச்சர் சி.வி. சண்முகம்

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கையில், “தந்தை, மகன் உயிரிழந்த காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தருவதே அரசின் நிலைபாடு. உயிர்களையும், உறவுகளையும் இழந்துவாடுபவர்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை அரசு நிச்சயம் உரித்தாக்கும். ஒரு தந்தையை, ஒரு சகோதரனை, ஒரு கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலியை உணர்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.