இரட்டை இலைக்கு மிகப்பெரிய ஆபத்து -அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

 

இரட்டை இலைக்கு மிகப்பெரிய ஆபத்து -அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

விருத்தாசலத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், “இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் செய்து வருகிறார்கள். எம்ஜிஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை. ஆனால் அதற்கு மிகப்பெரிய ஆபத்து. தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம்; ஆனால் தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும்.

இரட்டை இலைக்கு மிகப்பெரிய ஆபத்து -அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

அதிமுகவினர் எம்ஜிஆரின் வாரிசு என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை தான் ஏற்படுத்தும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய பெருந்தலைகள் இல்லாத சூழலில் நடக்கும் தேர்தல் என்பதால் முக்கியமான தேர்தல் இது” எனக் கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சு அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அல்லது பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவுடன் இணைய போகிறாரா என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பல முறை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே ஆட்சிக்காகவும், கட்சிக்காகவும் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. தொடர்ந்து டிடிவி தினகரனுடனான குழப்பதால் இரு அணிகள் உருவாகி நீதிமன்றம் வரை சென்று இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.