கைப்பிடி கறிவேப்பிலை,கொஞ்சம் மிளகு… காய்ச்சலை விரட்டும்!

காய்ச்சல்... எல்லோரையும் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக டைபாய்டு, நிமோனியா மற்றும் விஷக் காய்ச்சல்கள்கூட நமது உணவு முறைக்குப் பயந்து விரைவில் குணமாகும். மருந்துகள் கொடுப்பதனால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. குறிப்பாக காய்ச்சல் குணமாக மருந்து சாப்பிட்டு விட்டோமே என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை உண்டால் மூன்று நாள்களில் சரியாக வேண்டிய காய்ச்சல் மேலும் சில நாள்கள் நீடிக்கும். ஆகவே காய்ச்சலின்போது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும்.

இட்லி, இடியாப்பம்:
காய்ச்சல் பாதித்த நேரங்களில் சிலருக்கு குமட்டல், வாய்க் கசப்பு, எச்சில் ஊறுதல், புளிப்புத் தன்மை, சுவையற்ற நிலை போன்றவை இருக்கும். மேலும் எதையும் சாப்பிடப் பிடிக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் சில உணவுப்பொருள்களை இரண்டு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவுகள் நல்லது. இவற்றுக்கு இணை உணவாக கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித்தழை துவையல், புதினாத் துவையல் மற்றும் பச்சை மிளகு, புதினா, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த துவையல் சேர்த்துக் கொள்ளலாம். காய்ந்த புதினாக்கீரை, காய்ந்த கறிவேப்பிலை, மிளகை சம அளவாகச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

மிளகு, பூண்டு:
பகல் உணவில் குழைய வேக வைத்த புழுங்கலரிசிச் சோற்றுடன் மிளகு ரசம் சேர்த்துச் சாப்பிடலாம். வெள்ளைப் பூண்டு, மிளகு, வெந்தயம் சேர்த்து செய்த ரசம், சூப், குழம்பு போன்றவற்றையும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த புழுங்கலரிசிப் பொங்கலும் நல்லது. இரவு உணவு காலை உணவைப் போல ஆவியில் வெந்த உணவுகளான இட்லி, இடியாப்பமாக இருந்தால் நல்லது. பாலில் வெள்ளைப் பூண்டு சேர்த்து வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் அருந்துவது நல்லது. வெந்நீர் அருந்தலாம் அல்லது சாதாரண நீரை அடிக்கடி அருந்தவேண்டும்.

சளிக்காய்ச்சல், தலைவலி, தும்மல், இருமல், ஜலதோஷம் இருக்கும்போது தூதுவளைத் துவையல் ஓர் அருமையான இணை உணவாகும்.வீடுகளில் வளர்க்கும் துளசி, ஓமவல்லி, தூதுவளை இலைகளுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதும் காய்ச்சல் நேரங்களில் பலன் தரும்.

கறிவேப்பிலை:
பத்து மிளகை வாணலியில் வெறுமனே கருகுமளவு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கஷாயமாக்கிக் குடிக்க வேண்டும். காலை, மாலை, இரவு என குடித்து வந்தால் இரண்டொரு நாள்களில் எந்தவிதமானக் காய்ச்சலும் குணமாகும். இதேபோல் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, நான்கைந்து மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகும்.

பழங்கள்:
தேனுடன் தண்ணீர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சீதளக்காய்ச்சல் சரியாகும். தேனுடன் இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட்டால் பசி உண்டாகும். இதனால் வாய்க் கசப்பு நீங்குவதுடன் புளித்த ஏப்பம் வருவது நிற்கும். காய்ச்சலின்போது மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சைப் பழங்கள் அருந்தலாம். ஃபுளூ காய்ச்சல், மலேரியா மற்றும் குளிர் காய்ச்சலின்போது எலுமிச்சைச் சாற்றை வெந்நீரில் கலந்து அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

Most Popular

கேரளாவில் விமான விபத்து : அவரச உதவி எண்கள் அறிவிப்பு!

துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது நேற்று விபத்திற்குள்ளானது. 191 பேர் பயணித்த இந்த விமான விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 17...

கேரள விமான விபத்தில் 20 பேர் மரணம்: 2 விமானிகளும் உயிரிழப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து இந்தியர்களை கேரளா அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி...

காலை நேரம்… தெருவில் கிடந்த மனித மண்டை ஓடு… பதறிய பழனி மக்கள்!- காரணம் மந்திரவாதிகளா? குடிமன்னர்களா?

தெருவில் மனிதர்களின் மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை பார்த்து பழனி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மந்திரவாதிகள் இப்படி செய்தார்களா அல்லது குடிமன்னர்கள் இந்த எலும்பு  கூட்டை போட்டுச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை...

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக...