“பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” : அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

“பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” : அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

“பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” : அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர்., முதல்வரிடம் அறிக்கை தந்த 5 ஆவது நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். மாணவர்கள் வரும் மார்ச் மாதம் தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளதால் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

“பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” : அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலானால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.