கொரோனா பாதித்த 5 ஹாக்கி வீரர்களின் தற்போதைய நிலைமை!

 

கொரோனா பாதித்த 5 ஹாக்கி வீரர்களின் தற்போதைய நிலைமை!

இந்திய ஹாக்கி அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அணி தலைவர் மன்பிரீத் சிங் மற்றும் வீரர்கள் கிருஷ்ணன் பி பகத், சுரேந்தர் குமார், வருண் குமார், ஜஸ்கரன் சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்பரிசோதனை பெங்களூரூவில் நடத்தப்பட்டது.

இந்த ஐந்து ஹாக்கி வீரர்களும் பெங்களூருவின் தேசிய மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது நலமாக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 5 ஹாக்கி வீரர்களின் தற்போதைய நிலைமை!

இந்த ஐந்து வீரர்களும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள, இந்திய விளையாட்டு ஆணையத்தின் உள் மருத்துவர் மற்றும் மாநில அரசின் ஒரு மருத்துவர் ஆகியோரால் கவனிக்கபடுகின்றனர்.

கூடுதலாக, இந்திய விளையாட்டு ஆணையம் மணிப்பால் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர்களும் வீர்ர்களை கவனித்து கொண்டனர்.

இன்று மாநில அரசால் நியமிக்கப்பட்டு வீரர்களைக் கவனித்த டாக்டர். அவினாஷ் எச்.ஆர், “வீரர்களின் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட்டு, ஐந்து வீரர்களும் லேசான அறிகுறி உடையவர்கள் என தெரிவித்தார். மேலும் ஐந்து பேரில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு காய்ச்சல் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், பிற ஆதரவு மருந்துகள் தரப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கொரோனா பாதித்த 5 ஹாக்கி வீரர்களின் தற்போதைய நிலைமை!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், “நான் அவர்கள் ஐந்து பேருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த கவனிப்பை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது” என்றும் தெரிவித்தார்.