21 ஆம் தேதி முதல் நடப்பு செமஸ்டர் தேர்வு- சென்னை பல்கலை

 

21 ஆம் தேதி முதல் நடப்பு செமஸ்டர் தேர்வு- சென்னை பல்கலை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

21 ஆம் தேதி முதல் நடப்பு செமஸ்டர் தேர்வு- சென்னை பல்கலை

இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் 21-ம் தேதி துவங்கும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை வரும் 14-ம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், ஹால் டிக்கெட் வரும் 15-ம் தேதி வெளியாகும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பு செமஸ்டர் தெர்வுகள் 3 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறவுள்ளது. முழுமையான விவரங்களுக்கு http://www.unom.ac.in இணையதளத்தை அணுகவேண்டும்.