தனியார் மருத்துவமனைகளை வாழவைக்க ஊரடங்கு தளர்வு! – மநீம தொழிலாளர் நல அணி குற்றச்சாட்டு

 

தனியார் மருத்துவமனைகளை வாழவைக்க ஊரடங்கு தளர்வு! – மநீம தொழிலாளர் நல அணி குற்றச்சாட்டு

ஊரடங்கைத் தளர்த்தி தனியார் மருத்துவமனை வியாபாரிகளை வாழ வைப்பதே மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் பலரும் தங்கள் உயிரைக் காக்க தனியார் மருத்துவமனைகளை நாடி ஓடி வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளை வாழவைக்க ஊரடங்கு தளர்வு! – மநீம தொழிலாளர் நல அணி குற்றச்சாட்டு

அப்படி தனியார் மருத்துவமனைக்கு வருபவர்களிடமிருந்து லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று அறிவித்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள் சிகிச்சைக் கட்டணமாக ரூ.2.31 லட்சமும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு 17 நாட்களுக்கு ரூ.4.31 லட்சமும், ஒரு நாளைக்கு ரூ.43 ஆயிரம் வசூலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இதுவே, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.9600 கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் நல அணி மாநிலச் செயலாளரும்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவருமான பொன்னுசாமி கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரானா நோய் தொற்று கடுமையாக பரவி வரும் சூழலில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அதிகளவில் தளர்த்துவதின் நோக்கம் தனியார் மருத்துவ வியாபாரிகளை வாழ வைத்து ஆட்சியாளர்களின் சொந்த கஜானாவை நிரப்பத் தான் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது. இது ஏழை மக்களுக்கான அரசல்ல என்பது மறுபடியும் நிரூபணம்” என்று கூறியுள்ளார்