ஊரடங்கு நீட்டிப்பு… உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!

 

ஊரடங்கு நீட்டிப்பு… உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டது சரியான நடவடிக்கை இல்லை என்று உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் இன்னும் அதிகம் பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரகுநாதன் சென்னையில் இன்று

ஊரடங்கு நீட்டிப்பு… உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!

நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான முடிவை மருத்துவர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்தி அறிவிப்பது சரியாக இருக்காது. உற்பத்தியாளர்களுடனும் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 31ம் தேதி வரை என்று கணக்கிட்டால் 150 நாட்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படுகிறது. சம்பளமும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். 20, 30 சதவிகிதம் பேர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதனால் போதுமான உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை.

ஊரடங்கு நீட்டிப்பு… உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!
தமிழக அரசு சிறு, குறு தொழில்களுக்கு உதவிகள் செய்கிறது. ஆனால், மருத்துவர்களிடம் மட்டுமே ஊரடங்கு தொடர்பான ஆலோசனை நடத்துவதில் அர்த்தம் இல்லை. மத்திய அரசே இ-பாஸ் வேண்டாம் என்று அறிவித்துள்ள நிலையில் மாநிலத்தில் அதை ஏன் அமல்படுத்த வேண்டு;ம. கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளலாம், ஆனால் பசி பட்டினியுடன் வாழ முடியாது. ஆறு மாதங்கள் உற்பத்தியில்லை என்றால் நிறுவனங்கள் என்ன ஆகும். ஆறு மாத தவணை தொடர்பாக வங்கிகள் நெருக்கடி தரும். நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்றார்.