தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசிக்கிறார்.

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் 1,859 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 28 பேர் உயிரிழந்த கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 023ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…முதல்வர் ஆலோசனை!

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…முதல்வர் ஆலோசனை!

சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளை திறக்க அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது