ஊரடங்கு நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அமல்!

 

ஊரடங்கு நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அமல்!

கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன.

ஊரடங்கு நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அமல்!

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

அழகு நிலையங்கள் , சலூன்கள் குளிர்சாதன வசதி இயலாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

பூங்காக்கள் விளையாட்டு பூங்காகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் செயல்படலாம்

வேளாண் உபகரணங்கள் பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்

ஊரடங்கு நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அமல்!

கண் கண்ணாடி விற்பனை மற்றும் நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் . டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் . கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம்.

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது பத்து நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி . ஏற்றுமதி அதன் எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் செயல்படலாம்

ஊரடங்கு நீட்டிப்பு : புதிய தளர்வுகள் அமல்!

தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டும் நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம். பள்ளி, கல்லூரி ,பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை நிர்வாக பணிகள் செய்ய அனுமதிக்கப்படும். வீட்டுவசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்

இ-பதிவு மற்றும் தொழிற்சாலை அடையாள அட்டையுடன் இருசக்கர வாகனங்களில் ஊழியர்கள் வேலைக்கு சென்று வர அனுமதி

மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை 6:00 மணி வரை செயல்படும்