தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் இன்று ஆலோசனை!!

 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர்  இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர்  இன்று ஆலோசனை!!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்கிறார்.தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர்  இன்று ஆலோசனை!!


கடந்த முறை மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன. வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது .கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கூடுதல் தகவல்கள் அளிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார். பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய ஜவுளி கடைகள், நகைக் கடைகளுக்கு அனுமதி அளித்த ஆலோசனையை மேற்கொள்ளப்படுகிறது.