தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

 

தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு , தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகள் பதிவாவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக 12 ஆயிரத்துக்குள்ளாகவே பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, இன்று 16 ஆயிரத்தை எட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல, உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 100ஐ கடந்து விட்டன. இவ்வாறு பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு மாதத்திற்கும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்திருந்த போதிலும், முழுமையாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை. அதற்கு மாறாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து வந்தது.

இந்த நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்காணிப்பு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.