“விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை” – பாஸ்கரன் வேதனை

“விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை” – பாஸ்கரன் வேதனை

கடலூர்

அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சதவீத வேலைவாய்ப்பு, இன்னும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட இல்லை என்று அர்ஜுனா விருதுபெற்ற விளையாட்டு வீரர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர்

“விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை” – பாஸ்கரன் வேதனை

ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி

“விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை” – பாஸ்கரன் வேதனை

உள்ளதாகவும், அதிலிருந்து மீண்டு விளையாட்டு துறைக்கும் மற்றும் நாட்டிற்கும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என கேட்டுகொண்ட பாஸ்கரன், வரலாறு சிறப்பு மிக்க திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.